ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை | பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான பி.டி.உஷா மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு உள்ளது.
பி.டி.உஷா
பி.டி.உஷாஎக்ஸ் தளம்
Published on

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்ற பிறகு, இவருக்கும், குழு உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. கவுன்சில் உறுப்பினர்கள் விதிகளை மீறினர் என குற்றம்சாட்டிய பி.டி.உஷா, அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்படுகிறார் என அவர்மீது உறுப்பினர்கள் புகார் கூறினர்.

இந்த நிலையில், பி.டி.உஷா ஒலிம்பிக் ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகைகள் வழங்கியதாகவும், இதனால் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதை பி.டி. உஷா மறுத்துள்ள நிலையில், சி.ஏ.ஜி. விளக்கம் கேட்டுள்ளது. தவிர, இதுதொடர்பாக அவருக்கும் நிர்வாக குழுவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் பி.டி.உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சட்டவிதிகளை மீறியதற்காகவும், இந்திய விளையாட்டுத் துறைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் இவர் மீது தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. வரும் 25-ஆம் தேதி நடைபெறும் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் இத்தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.

இதையும் படிக்க: காற்றில் கலந்த உயிர் | ”ஒரு போரால் எங்கள் காதல் முறிந்தது”.. வைரலாகும் ரத்தன் டாடாவின் காதல் கதை!

பி.டி.உஷா
“கடின உழைப்பு நல்ல பயனை தரும்” - சிந்துவை வாழ்த்திய பி.டி.உஷா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com