சிஎஸ்கே-வின் புதிய மிரட்டல், நிகிடி!

சிஎஸ்கே-வின் புதிய மிரட்டல், நிகிடி!
சிஎஸ்கே-வின் புதிய மிரட்டல், நிகிடி!
Published on

சரியான பந்துவீச்சாளர் இன்றி தடுமாறி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமீபத்திய மிரட்டல், லுங்கி நிகிடி! தந்தை இறந்த துக்கத்தில் இருந்து மீண்டு வந்தவர், சென்னை ரசிகர்களின் செல்லப் பிள்ளையாகிவிட்டார் முதல் போட்டியிலேயே!

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தாகூர், தீபக் சாஹர், பிராவோ, வாட்சன் ஆகியோர்தான் வேகப்பந்துவீச்சாளர்கள். இங்கிலாந்தின் மார்க் வுட், டேவிட் வில்லி ஆகியோர் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். மார்க் வுட் சிஎஸ்கே ஆடிய முதல் போட்டியில் களமிறங்கினார். தாகூரும் தீபக்கும் ரன்களை விட்டுக்கொடுப்பதில் வல்லவர்கள். வாட்சன் சில நேரம் பந்துகளை விட்டுக்கொடுப்பதில், சிக்கின சன். சில நேரம் அவர் பந்துகளையும் விளாசி விடுகின்றனர். பிராவோவின் அனுபவம் மட்டுமே சிஎஸ்கேவை காப்பாற்றி வருகிறது. கடந்தப் போட்டியில் களமிறங்கிய ஆசிப், அதிக ரன்களை விட்டுக்கொடுத்தாலும் விக்கெட் வீழ்த்தினார். இருந்தாலும் போட்டி கடைசி நேரம் வரை பரபரப்பாகவே இருந்தது. இதற்கு சரியான பந்துவீச்சாளர்கள் இல்லாததுதான் காரணம். சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மாதிரி சிஎஸ்கே-வுக்கு மிரட்டும் பந்துவீச்சாளர்கள் குறைவு. அந்த இடத்தை நிகிடி நிரப்புவார் என்கிறார்கள்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இளம் வேகமான இந்த நிகிடி, கடந்த பிப்ரவரியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான் அறிமுகமானார். முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இவரை, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே இழுத்துக்கொண்டது.  இதற்காக இந்தியா வந்திருந்தார் நிகிடி. கடந்த மாதம் இவரது தந்தை திடீரென மரணமடைந்து விட நிலைகுலைந்து போன நிகிடி, சொந்த ஊர் திரும்பினார் வேகமாக. இறுதி சடங்கு எல்லாம் முடிந்த பின் இந்தியா திரும்பியவர், சிஎஸ்கே அணியில் இணைந்து கொண்டார். 

டெல்லி அணிக்கு எதிராக களமிறங்கிய நிகிடி, முதலில் வீசிய இரண்டு ஓவர்களில் கொடுத்தது வெறும் ஏழு ரன்கள் மட்டுமே. டெல்லி வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் அவர் பந்தை அடிக்க முடியவில்லை. பின்னர் ரிஷாப் பன்ட்டின் வெறிகொண்ட விளாசலுக்கு இவரும் தப்பவில்லை. 4 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் 12 டாட் பந்துகள். அந்த ஒரு விக்கெட் ரிஷாப்புடையது. அந்த விக்கெட்டை எடுக்கவில்லை என்றால் டெல்லி வெற்றி பெற்றிருக்கும்.

கடைசி கட்ட ஓவர்களில் கச்சிதமாக வீசுவதில் நிகிடி, கில்லாடி. யார்க்கர், வேகத்தை விதவிதமாக மாற்றுவது, வெவ்வேறு லென்தில் வீசுவது என சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் ஆகியிருக்கும் நிகிடி அடுத்து வரும் போட்டிகளில் அசத்துவார் என்கிறார்கள் நம்பிக்கையாக!


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com