IND vs NZ: இந்தியா முதலில் பேட்டிங் - கருணை காட்டுமா மழை?

IND vs NZ: இந்தியா முதலில் பேட்டிங் - கருணை காட்டுமா மழை?
IND vs NZ: இந்தியா முதலில் பேட்டிங் - கருணை காட்டுமா மழை?
Published on

கிறிஸ்ட்சர்ச்சில் பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும்  3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2-வது ஆட்டத்தில் 12.5 ஓவர்கள் மட்டுமே பந்துவீசப்பட்ட நிலையில் மழையால் பாதியில் ரத்து ஆனது. இந்த நிலையில் தொடரை இழக்காமல் சமன் செய்ய இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய அழுத்தத்துடன் இந்தியா களம் இறங்குகிறது.

கிறிஸ்ட்சர்ச்சில் பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பிறகு டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.  மேலும் இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை, 2-வது போட்டியில் விளையாடிய வீரர்களுடன் களமிறங்குகிறது. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com