ஜேமிசனின் மிரட்டல் பந்துவீச்சில் வீழ்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள்: மீண்டும் பரிதாபம்..!

ஜேமிசனின் மிரட்டல் பந்துவீச்சில் வீழ்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள்: மீண்டும் பரிதாபம்..!
ஜேமிசனின் மிரட்டல் பந்துவீச்சில் வீழ்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள்: மீண்டும் பரிதாபம்..!
Published on

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் மீண்டும் சொதப்பியுள்ளனர். 79 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, கடைசியில் 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 63 ஓவர்களிலேயே இந்திய அணி ஆல் அவுட் ஆனது.

இந்திய அணியில் ஹனுமன் விஹாரி 55(70), பிருத்வி ஷா 54(64), புஜாரா 54(144) ஆகியோர் அரைசதம் அடித்து சற்றே ஆறுதல் அளித்தனர். மயங்க் அகர்வால் 7, விராட் கோலி 3, ரஹானே 7, ரிஷப் பண்ட் 12, ஜடேஜா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் முகமது சமி 12 பந்துகளில் 16 ரன்களும், பும்ரா 11 பந்துகளில் 10 ரன்களும் எடுத்தனர்.

டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் முதலிடத்தில் இந்திய அணி இருப்பதற்கு விராட் கோலி, ரஹானே, புஜாரா உள்ளிட்ட பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு முக்கியமான காரணம். ஆனால், நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் மற்றும் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் சொதப்பலாக இருந்து வருகிறது. இதனால், தொடர் தோல்விகளை பெற்று வருகிறது. நியூசிலாந்து அணியின் பந்து வீச்சும் மிரட்டலாக உள்ளது.

நியூசிலாந்து அணியின் கேல் ஜேமிசன் மிரட்டலாக பந்துவீசி வருகிறார். இந்தத் தொடரில்தான் அவர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். முதல் இன்னிங்சிலேயே அவர் 4 விக்கெட் வீழ்த்தி அசத்தி இருந்தார். தற்போது இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அரைசதம் விளாசி நிலைத்து விளையாடிய பிருத்வி ஷா மற்றும் புஜாராவின் விக்கெட்டுகளை இவர்தான் சாய்த்தார்.

இந்திய அணியின் பேட்டிங்தான் சொதப்பல் என்றால் பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. முதல் இன்னிங்சை விளையாடி வரும் நியூசிலாந்து அணி 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய பந்துவீச்சாளர்களால் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. பும்ராவின் ஓவரை எளிதில் எதிர்கொண்டுவிடுகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com