டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்தது நியூசிலாந்து

டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்தது நியூசிலாந்து
டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்தது நியூசிலாந்து
Published on

வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அணியை முந்திக்கொண்டு அறிவித்துள்ளது நியூசிலாந்து.

ஐக்கிய அரபு அமீரத்தில் ஐபிஎல் டி20 தொடர் முடிவடைந்த பின்பு டி20 உலகக் கோப்பை போட்டிகள் துபாய் மற்றும் ஓமன் நாடுகளில் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டது ஐசிசி.

சூப்பர் 12 சுற்று, குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன. குரூப் A தகுதி சுற்று வெற்றியாளரும், குரூப் B தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளனர். குரூப் 2வில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ளன. குரூப் B தகுதி சுற்று வெற்றியாளரும், குரூப் A தகுதி சுற்றின் ரன்னரும் விளையாட உள்ளனர்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவித்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம். அதன்படி நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் மொத்தம் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

நியூசிலாந்து அணி விவரம்: கேன் வில்லியம்சன், டாஸ் ஆஸ்லே, ட்ரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டேவான் கான்வே, லாக்கி பெர்கியூசன், மார்டின் குப்தில், ஜேமிசன், டேரில் மிட்சல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்சல் சாண்ட்னர், டிம் செஃப்ரெட், இஷ் சோதி, டிம் சவுத்தி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com