ஆர்ச்சர் மீது நிறவெறி தாக்கு: டெஸ்ட் போட்டிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு

ஆர்ச்சர் மீது நிறவெறி தாக்கு: டெஸ்ட் போட்டிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு
ஆர்ச்சர் மீது நிறவெறி தாக்கு:  டெஸ்ட் போட்டிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆர்ச்சரை நிறவெறி சார்ந்த வார்த்தைகளால் நியூசிலாந்து ரசிகர் ஒருவர் விமர்சித்த நிலையில் இரண்டாவது டெஸ்ட்டுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட், மவுன்ட் மவுங்கானுயி-யில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. 

இந்தப் போட்டியின் போது, பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த ஆர்ச்சரை நியூசிலாந்து ரசிகர் ஒருவர் நிறவெறி குறித்த வார்த்தைகளால் சாடினார். இதற்கு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் வருத்தம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மைதானத்தில் இருந்த காமிரா பதிவுகளை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 29ஆம் தேதி ஹமில்டன் நகரின் சேட்டான் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com