நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர், துபாயில் நடந்துவருகிறது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த நேபாளம் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி, 19.3 ஓவர்களில் 97 ரன்னு ஆல் அவுட் ஆனது.
இந்தப் போட்டியில் நேபாள அணியில் இடம்பிடித்திருந்த, இளம் வீரர் ரோகித் பாடெல் 55 ரன் அடித்தார். அவருக்கு வயது 16 ஆண்டு 146 நாட்கள். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு, குறைந்த வயதில் அரைசதம் அடித்தவர் என்ற சிறப்பை சச்சின் தெண்டுல்கர் மட்டுமே பெற்றிருந்தார். 1989 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சச்சின் அரைசதம் (59 ரன்) எடுத்த போது, அவர் வயது 16 ஆண்டு 213 நாட்கள். அவர் சாதனையை ரோகித் பாடெல் முறியடித்துள்ளார்.
பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிதி, இலங்கைக்கு எதிராக 16 ஆண்டுகள் 217 நாட்களில் இந்த சாதனையை செய்திருந்தார்.