செல்ஃபி எடுத்தபின் மொபைல் நம்பர் கேட்ட பெண் ரசிகை.. நீரஜ் சோப்ரா அளித்த ஸ்மார்ட் ரிப்ளை! #Video

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 டயமண்ட் லீக் தொடரில் 1செமீ வித்தியாசத்தில் டைட்டிலை தவறவிட்ட சோப்ரா இரண்டாம் இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
neeraj chopra
neeraj chopraweb
Published on

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, தன்னுடைய துடிப்பான ஆட்டத்திறனால் உலகம் முழுவதும் அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற 2024 டயமண்ட் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா, முதலிடத்தை ஒரு செமீ வித்தியாசத்தில் தவறவிட்டார். முதலிடம் பிடித்த கிரேனேடியன் ஈட்டி எறிதல் வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 87.87மீ தூரம் வீசிய நிலையில், நீரஜ் சோப்ரா 87.86மீ தூரம் வீசி 1செமீ வித்தியாசத்தில் டைட்டில் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

neeraj chopra
neeraj chopra

ஒவ்வொரு போட்டியின்போது ஈட்டியை விடுவித்த பிறகு, நீரஜ் சோப்ரா வழக்கமாக தனது இடது உள்ளங்கை தரையில் தொட்டு கீழே விழுவார். ஆனால் சனிக்கிழமையன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஆறு முயற்சிகளிலும் சோப்ரா கீழே விழுவதையும், இடது உள்ளங்கையால் தரையைத் தொடுவதையும் தவிர்த்தார்.

neeraj chopra
neeraj chopra

பின்னர் டைட்டிலை தவறவிட்டபிறகு பேசிய நீரஜ் சோப்ரா, தன்னுடைய இடதுகையில் நான்காவது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன் விளையாடியதாக தெரிவித்தார். அவருடைய அர்ப்பணிப்பை பலரும் பாராட்டிவருகின்றனர்.

neeraj chopra
கடைசி நாள்.. இறுதி 3 நிமிடம்.. வெற்றிக்கு 1விக். தேவை.. பேட்ஸ்மேனை சூழ்ந்த 11வீரர்கள்! த்ரில் போட்டி

மொபைல் நம்பர் கேட்ட ரசிகை.. நீரஜ் சோப்ரா ஸ்மார்ட் ரிப்ளை!

டயமண்ட் லீக் தொடரில் விளையாடியபிறகு பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் ரசிகர்களை சந்தித்தார் நீரஜ் சோப்ரா. அப்போது நீரஜ் சோப்ராவிடம் இரண்டு ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு அவர் நெருங்கிவந்த போது, அதிகப்படியான மகிழ்ச்சியடைந்த ஒரு ரசிகை துள்ளிக்குதித்தார். இரண்டு ரசிகைகளுடன் நீரஜ் சோப்ரா செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

பின்னர் துள்ளிக்குதித்த அந்த ரசிகை, நீரஜ் சோப்ரா உங்கள் மொபைல் நம்பர் கிடைக்குமா? என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு ஸ்மார்ட்டாக ரிப்ளை செய்த நீரஜ், தற்போதுதான் வேறுஒருவரிடம் கொடுத்துவிட்டதாக கூறி ரசிகருக்கு சற்று ஏமாற்றமளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

neeraj chopra
”என் அனைத்து நட்சத்திரங்களும் நீ தான்” - நடிகர் சித்தார்த்-அதிதி ராவ் இருவருக்கும் டும்..டும்..டும்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com