“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்று வரும் டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
கத்தாரில் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். 2022 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற சோப்ரா, இந்த முறையும் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மேலும் இந்தியாவுக்காக கடந்த ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதால் எப்போதும் நீரஜ் சோப்ரா மீது எதிர்பார்ப்பு அதிகமிருக்கும்.
இந்நிலையில் நீரஜ் சோப்ரா 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து டையமண்ட் லீக்கில் முதல் இடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
நீரஜ் சோப்ராவுக்கு அடுத்தபடியாக செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லக் (88.63 மீட்டர்) 2ஆவது இடத்தையும், கிரெனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர் ஸ் (85.88 மீட்டர்) 3 ஆவது இடத்தையும் பிடித்தனர்.