கோலியின் சாதனையை புகழ ஆக்ஸ்ஃபோர்டு புதிய அகராதி தேவை: ரவி சாஸ்திரி

கோலியின் சாதனையை புகழ ஆக்ஸ்ஃபோர்டு புதிய அகராதி தேவை: ரவி சாஸ்திரி
கோலியின் சாதனையை புகழ ஆக்ஸ்ஃபோர்டு புதிய அகராதி தேவை: ரவி சாஸ்திரி
Published on

விராட் கோலியின் சாதனைகளை பற்றி பேச வேண்டும் என்றால் லேட்டஸ் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி வாங்கி அதில்தான் வார்த்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் என ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான ஆறாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி,  5-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதில் விராட் கோலி அபார சதம் அடித்தார். இது அவருக்கு 35 வது சதம் ஆகும். இந்தத் தொடரில் அவருக்கு இது 3 வது சதம். இதன் மூலம், இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடரில் 3 சதங்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற சிறப்பை விராட் பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில், குறைவான போட்டிகளில் 17 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் கோலி நிகழ்த்தினார். இந்தத் தொடரில் 6 ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து 558 ரன்கள் குவித்தன் மூலம், இரு அணிகள் இடையிலான தொடரில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற புதிய சாதனையையும் விராட் கோலி படைத்தார்.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேசும்போது, “விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைலை பற்றி பேச வார்த்தைகளே இல்லை. விராட் கோலியின் பேட்டிங் ஸ்டைல் குறித்து ஒருவர் புகழ்ந்து பேச வேண்டும் என்றால் அதற்கு புத்தகக் கடைக்கு சென்று லேட்டஸ்ட் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியை வாங்கி அதில்தான் வார்த்தைகளை தேடிக் கண்டுப்பிடிக்க வேண்டும்”என்றார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ரவி சாஸ்திரி, நான் உங்கள் இடத்தில் இருந்தால் நாளைக்கு இதனை செய்வேன் என்றும் கூறினார். விராட் கோலி தான் உலகிலேயே தலைசிறந்த பேட்ஸ்மேன் என சாதாரணமாக தன்னால் கூறமுடியும் என்றும் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com