149 பவுண்டரிகளுடன் 1045 ரன்கள் குவித்து சிறுவன் சாதனை..!

149 பவுண்டரிகளுடன் 1045 ரன்கள் குவித்து சிறுவன் சாதனை..!
149 பவுண்டரிகளுடன் 1045 ரன்கள் குவித்து சிறுவன் சாதனை..!
Published on

மும்பையை சேர்ந்த சிறுவன் ஒருவர் 515 பந்துகளில் 1045 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதில் 149 பவுண்டரிகள் அடங்கும்.

நவிமும்பையில் 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு இடையிலான மும்பை ஷீல்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றிருக்கிறது. இதன் அரையிறுதி ஆட்டத்தில் 14 வயது சிறுவரான தன்ஷிக் கவடேர் 515 பந்துகளில் 1045 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதில் 149 பவுண்டரிகளும், 67 சிக்சர்களும் அடங்கும். இரண்டு நாட்களில் சுறுசுறுப்பாக ஆடி அவர் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

இதற்கு முன்னதாக பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட்டில் பிரணவ் தனவாடே 1009 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்த நிலையில் அந்தச் சாதனையை தற்போது தன்ஷிக் கவடேர் முறியடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com