தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தமிழக அணி ஜார்க்கண்ட் அணியுடன் தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்தரை ஹாக்கி மைதானத்தில், கடந்த 17ஆம் தேதி முதல் ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 4வது நாளான இன்று காலை நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ஜார்க்கண்ட் அணிகள் மோதின. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜார்க்கண்ட் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்றினார். ஆட்டத்தின் இறுதியில் 7 - 1 என்ற கோல்கணக்கில் ஜார்க்கண்ட் அணி வெற்றி பெற்றது. தமிழக அணி வெற்றி பெறும் என்ற உற்சாகத்தில் இருந்த உள்ளூர் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது போட்டியில் சதிஷ்கர் மற்றும் கோவா அணிகள் மோதின. போட்டி தொடங்கியது முதல் சிறப்பாக விளையாடிய சதிஷ்கர் அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்து தங்களது அணிக்கு வெற்றியை தேடித்தந்தனர். போட்டியின் இறுதியில் 9 - 0 என்ற கோல்கணக்கில் சதிஷ்கர் அணி வெற்றி பெற்றது.
இன்று மாலையில் நடைபெறும் 3வது போட்டியில் டெல்லி, கர்நாடகா அணிகளும், 4வது போட்டியி;ல் உத்ரகாண்ட், குஜாராத் அணிகளும், 5வது போட்டியில் பஞ்சாப் - மகாராஷ்டிரா அணிகளும் பலப்பரிட்சை நடத்த உள்ளன.