அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது காவல்துறை சுட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சின்சினாட்டி டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் இருந்து விலகுவதாக முன்னணி வீராங்கனை நவோமி ஒசாக்கா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற கருப்பினத்தவர் காவல்துறையினரால் சுடப்பட்டார். இனவெறுப்பின் காரணமாக நடைபெறும் இது போன்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சின்சினாட்டி தொடரின் அரையிறுதியில் இருந்து ஒசாக்கா வெளியேறியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், முதலில் நான் ஒரு கருப்பினத்தவர், அதற்குப் பின்னரே விளையாட்டு வீராங்கனை. என்னுடைய ஆட்டத்தை விட ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்ட அநீதிக்கு, நீதிப்போராட்டத்தின் மீது அதிக கவனம் தேவை எனக் கூறியுள்ளார். ஒசாக்காவைப் போலவே என்பிஏ கூடைப்பந்தாட்ட வீரர் மில்வாக்கி பக்ஸும் தொடரின் பிளேப் ஆஃப் போட்டிகளை விளையாடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.