மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 213 ரன்கள் குவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இன்றைய 2வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. மும்பையில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலேயே பிருத்வி ஷாவின் 7 (6) விக்கெட்டை கொடுத்து தடுமாறியது. அத்துடன் ஸ்ரேயாஸ் ஐயர் 16 (10) ரன்களில் விக்கெட்டையும் இழந்தார்.
ஆனால் தொடக்க வீரர் ஷிகர் தவான் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 43 (36) எடுத்து அவுட் ஆகினார். மறுபுறம் கோலின் முன்ரோ 47 (32) ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ரிஷாப் பண்ட், தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிக்ஸர் மழை பொழிந்த அவர், 27 பந்துகளில் 78 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் மிட்ஜெல் மெக்லெநகன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரிஷப் பண்டின் அதிரடியால் டெல்லி அணி கடைசி 6 ஓவரில் 99 ரன்கள் குவித்தது. மும்பை அணி ஐபிஎல் தொடரில் இதுவரை 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்ததில்லை. மும்பை அணியில் இன்று யுவராஜ் சிங் களமிறங்குகிறார்.