நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் துபாய் மைதானத்தில் விளையாடின.
டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்ததையடுத்து மும்பை அணி முதலில் பேட் செய்தது.
20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது மும்பை.
201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணி .
முதல் எட்டு பந்துகளில் ரன் எதுவும் சேர்க்காமல் 3 விக்கெட்டை இழந்து தள்ளாடியது.
பிருத்வி ஷா, ரஹானே மற்றும் ஷிகர் தவான் என டெல்லியின் மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ரன் சேர்க்காமல் டக் அவுட்டாகி வெளியேறினர்.
அதனால் பிரஷர் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் மீது விழுந்துள்ளது.
கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் 12 ரன்களில் அவுட்டாக பவர் பிளே ஓவர் முடிவில் 32 ரன்களுக்கு நான்கு விக்கெட்டை இழந்தது டெல்லி.
அப்போதே இந்த ஆட்டத்தில் தோற்று விட்ட டெல்லி சம்பிரதாயத்திற்காக 84 பந்துகளை விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
அப்படியெல்லாம் அசால்ட்டாக வெற்றியை கொடுத்துவிட முடியாது என தங்களது ஆட்டத்தின் மூலம் மும்பை வீரர்களை அச்சமூட்டினர் ஸ்டாய்னிஸும், அக்சர் பட்டேலும்.
இருப்பினும் செட்டாகி விளையாடிக் கொண்டிருந்த ஸ்டாய்னிஸை 16வது ஓவரில் காலி செய்தார் பும்ரா. அதே ஓவரில் சாம்ஸையும் வீழ்த்தி ஆட்டத்தை மும்பையின் பக்கமாக திருப்பினார் பும்ரா.
20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்து வீழ்ந்தது டெல்லி.
பும்ரா நான்கு ஓவர்கள் வீசி 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி 2020 ஐபிஎல் பைனலில் விளையாடுவது உறுதியாகி உள்ளது.