அமெரிக்காவில் இனவெறி சர்ச்சையால் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்ற இயக்கத்தின் மூலமாக இனவெறிக்கு எதிராக தங்களது கண்டனங்களை உலக மக்கள் பகிர்ந்தனர்.
இந்நிலையில், துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா இனவெறிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உடனான நேற்றைய ஆட்டத்தில் ஹர்த்திக் 21 பந்துகளில் 60 ரன்களை விளாசி இருந்தார். இருப்பினும் ராஜஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் மண்டியிட்ட படி நிற்கும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் முதன்முதலாக பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு மண்டியிட்டு ஆதரவு கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் தொடரில் தான்.