நீலகிரியில் பிரபலமடையும் சேற்று கால்பந்து போட்டி - மாணவ மாணவியர் மத்தியில் நல்ல வரவேற்பு!

பருவமழையை வரவேற்கும் விதமாக நடத்தப்பட்ட சேற்று கால்பந்து போட்டிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. போட்டி நடத்தப்பட்டதற்கான காரணம் என்ன... விரிவாக பார்க்கலாம்...
MUD FOOTBALL
MUD FOOTBALLTwitter
Published on

பல திரைப்படங்களில் மழைக்காலங்களின் போது சிலர் தேங்கிய நீரில் கால்பந்து விளையாடுவதை பார்த்திருப்போம். இதன் நீட்சியோ என்னவோ தற்போது சேற்றில் கால்பந்து விளையாடுவது நம் ஊர்புறங்களில் பிரபலமாகி வருகிறது. பார்ப்பதற்கு கோமாளித்தனமாக இருந்தாலும் சேற்றில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. சேற்றில் உரண்டு, புரண்டு, அடிபட்டு ஏற்படும் காயங்களையெல்லாம் கண்டுகொள்ளாமல் விளையாட வேண்டும். உடல்வலிமையை கூட்டுவதே இப்போட்டியின் நோக்கமே என்கின்றனர் இப்போட்டி ஏற்பாட்டாளர்கள்.

MUD FOOTBALL
MUD FOOTBALL

கேரளாவில் சேற்றில் கால்பந்து விளையாடுவது பிரபலமாக உள்ள நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீலகிரி கலை அறிவியல் கல்லூரியிலும் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதலில் களம் காண தயங்கிய மாணவர்கள், அதன் பிறகு உற்சாகத்துடன் விளையாடி ஆரவாரம் செய்தனர். மாணவர்கள் மட்டுமல்ல மாணவிகளும் சற்றும் சளைக்காமல் சேற்றில் இறங்கி விளையாடினர். முதலில் சிலருக்கு கண், வாயில் சேற்று நீர் சென்றது. எனினும் தடைகளை மீறி அவர்கள் விளையாடினர். இது காண்போரை ரசிக்கச் செய்தது. இது தங்களுக்கும் புது அனுபவத்தை கொடுத்ததாக சேற்றில் களமிறங்கிய மாணவிகள் தெரிவித்தனர்.

இதன் விதிமுறைகளும் சாதாரண கால்பந்திலிருந்து சற்று மாறுபட்டது. மட்டுமன்றி சாதாரண கால்பந்து போட்டியில் பந்தை சக வீரருக்கு கடத்துவது மிகவும் எளிது. ஆனால் MUD FOOTBALL எனப்படும் சேற்றில் கால்பந்து விளையாடுவது மிக கடினமான காரியம். அதனால் இது விளையாட முறையான பயிற்சி தேவை என்கின்றனர் களம் கண்ட மாணவ மாணவியர்கள்.

நீலகிரியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இந்த போட்டியை பிரபலப்படுத்தி, பல்கலைக்கழக போட்டிகளில் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com