"போட்டியைக் கணிப்பதில் பாண்டிங்கை விட தோனி வல்லவர்"  - மைக்கல் ஹஸி கருத்து !

"போட்டியைக் கணிப்பதில் பாண்டிங்கை விட தோனி வல்லவர்" - மைக்கல் ஹஸி கருத்து !

"போட்டியைக் கணிப்பதில் பாண்டிங்கை விட தோனி வல்லவர்" - மைக்கல் ஹஸி கருத்து !
Published on

ஒரு கிரிக்கெட் போட்டி எவ்வாறு செல்கிறது என்பதைக் கணிப்பதில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை விட சிஎஸ்கே கேப்டன் தோனி வல்லவர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மைக்கல் ஹசி கருத்து தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள மைக்கல் ஹசி பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், ரிக்கி பாண்டிங் மற்றும் தோனி இடையிலான கேப்டன்ஸி குறித்துப் பேசியுள்ளார் அதில் "தோனி மிகவும் அமைதியானவர். ஒரு போட்டியைத் திறனாய்வு செய்து அதன் போக்கைக் கணிப்பதில் பாண்டிங்கை விட வல்லவர். அதற்கு ஏற்றார்போல மைதானத்தில் வியூகங்களை வகுக்கக் கூடியவர். நானே சில நேரம் யோசிப்பேன், தோனி செய்வது சரியா? அவரின் முடிவுகள் எங்கே போகும் என்று. ஆனால் போட்டியின் முடிவு சாதகமாகவே இருக்கும். அது என்னை ஆச்சரிய மூட்டும். தோனியும் பாண்டிங்கும் கேப்டன்சியில் அவர்கள் பாணி வேறுவேறானது. ஆனால் அவை சிறப்பானது" என்றார்.

மேலும் தொடர்ந்த ஹஸி "இந்தியா போன்ற கிரிக்கெட்டை நேசிக்கும் நாட்டின் கேப்டனாக இருப்பது பெரிய சுமை. தோனியின் மிகப்பெரிய பலமாகக் கருதுவது, அந்தச் சுமையை சக வீரர்கள் மீது அவர் இறக்கி வைக்காததுதான். மிக முக்கியமாக இளம் வீரர்களிடம் அந்த அழுத்தத்தை அவர் திணிக்கவே மாட்டார். இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாகப் பார்க்கப்படுகிறது. இங்கே கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகப் பார்க்கமாட்டார்கள். வாழ்வின் அங்கமாகவே கருதுகிறார்கள். சில நேரங்களில் வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் வரும். இங்கு வெற்றி மட்டுமே ரசிகர்கள் பார்ப்பார்கள், அதனால்தான் இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பது சுலபமல்ல" எனத் தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com