இயற்கை முறையில் தர்பூசணி சாகுபடி : விவசாயியான தோனி..!

இயற்கை முறையில் தர்பூசணி சாகுபடி : விவசாயியான தோனி..!
இயற்கை முறையில் தர்பூசணி சாகுபடி : விவசாயியான தோனி..!
Published on

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி தர்பூசணி பயிரிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவிக்காத போதிலும், தற்போது சர்வதேச இந்திய அணியில் இடம்பெறுவதில்லை. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட்டாகி அழுதுவிட்டு சென்ற பின், இன்று வரையிலும் தோனி எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இதனால் அவரது ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர். இருந்தாலும் தோனியின் ரசிகர்கள் எண்ணிக்கை துளியும் குறையவில்லை. அவர் தொடர்பான செய்திகள் எதுவாகயிருந்தாலும் உடனே அதனை ரசிகர்கள் வைரலாக்கி விடுகின்றனர்.

சமீபத்தில்தான் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் பிட்சில் தோனி ரோலர் ஓட்டிய வீடியோ வைரல் ஆகியிருந்தது. அந்த வகையில் தற்போது தோனியின் வீடியோ ஒன்று அவரது ரசிகர்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. தோனியே தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில் தோனி இயற்கை முறையில் தர்பூசணி விவசாயம் பயிரிடுகிறார். பயிரிடுவதற்கு முன்பாக விவசாயிகள் செய்வதுபோல, பூமி பூஜை ஒன்றை தோனி போடுகிறார். ஊதுபத்தி ஏற்றி வணங்கும் தோனி, பின்னர் தனது கையினாலேயே தேங்காயை உடைத்துக் கும்பிடுகிறார். பின்னர், தர்பூசணி விதைகளை அவரே நிலத்தில் ஒவ்வொன்றாக் ஊன்றுகிறார்.

ராஞ்சியில் இந்த தர்பூசணி தோட்டத்தை அமைப்பதாக அந்த ஃபேஸ்புக் பதிவில் தோனி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 20 நாட்களுக்கு முன்பு பப்பாளி நடவு செய்து தோட்டம் அமைத்த நிலையில், தற்போது தர்பூசணி பயிரிடுவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு விவசாயம் செய்வது மகிழ்ச்சி அளிக்கும் ஒன்றாக இருக்கிறது என தோனி நெகிழ்ச்சியாக அந்தப் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

தோனியே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ பதிவை, ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். அத்துடன் சுமார் 4 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர். பலர் தங்கள் கருத்துக்களில், ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் இவ்வாறு இயற்கை விவசாயம் செய்வது, விவசாயத்தின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com