கிரிக்கெட்டில் பேட்டிங் செய்யும்போது மகேந்திர சிங் தோனிதான் தன்னுடைய சிறந்த பார்ட்னர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலர் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில்ல் நேரடியாக கலந்துரையாடி வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நேரலையாக வந்த கோலி இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தார் .
கெவின் பீட்டர்சன் ஒரு கேள்வியை கோலி முன் வைத்தார், அதாவது பேட்டிங்கின்போது உங்களுடைய சிறந்த பார்ட்னர் யார் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த கோலி "எனக்கு பொதுவாகவே வேகமாக ஓடுபவர்களை மிகவும் பிடிக்கும். அதுவும் ரன்களை எடுக்க முற்படும்போது நம்மை எதிர்பேட்ஸ்மேன் புரிந்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் தோனிதான் என்னுடைய சிறந்த பேட்டிங் பார்ட்னர். எங்கள் இருவரின் பேட்டிங் கூட்டணி சிறந்த ரன்களை இந்தியாவுக்காக எடுத்துள்ளது"
மேலும் தொடர்ந்த கோலி "தோனியை தவிர்த்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடும்போது டி வில்லியர்ஸுடன் பார்ட்னர்ஷிப் செய்வது பிடிக்கும்" என தெரிவித்துள்ளார். மேலும் இறுதியாக பேசிய கோலி " சைவ உணவுப் பழக்கத்துக்கு நான் ஏன் முன்பே மாறவில்லை என நினைக்கிறேன். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பே சைவத்துக்கு மாறியிருக்க வேண்டும். இந்தப் பழக்கம் இப்போது எல்லாவறையும் மாற்றிவிட்டது. உடல் லேசாகிவிட்டது, நேர்மறை எண்ணங்களுடனும் அதிக சக்தியுடனும் உள்ளேன்" என தெரிவித்துள்ளார்.