ஸ்டம்பிங்கில் தெறிக்கவிட்ட தோனி - மிரண்டு போன ஜடேஜா !(வீடியோ)

ஸ்டம்பிங்கில் தெறிக்கவிட்ட தோனி - மிரண்டு போன ஜடேஜா !(வீடியோ)
ஸ்டம்பிங்கில் தெறிக்கவிட்ட தோனி - மிரண்டு போன ஜடேஜா !(வீடியோ)
Published on

கேப்டன்ஷிப்பில் பல்வேறு புதிய சாதனைகளை படைத்த தோனி, தான் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் என்பதையும் இன்றளவும் நிரூபித்து வருகிறார். ஸ்டம்பிற்கு பின்னால் இருக்கும் அவர் இரண்டு முக்கியமான விஷயங்களுக்கு ஸ்பெஷல். ஒன்று; டிஆர்எஸ் என்னும் ரிவிவ் கேட்பதற்கு. இரண்டு; மின்னல் வேக ஸ்டம்பிங். 

இன்றைய போட்டியில் மகேந்திர சிங் தோனி செய்த மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் தனது சாதனையை முறியடித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 377 ரன் குவித்தது. இதனையடுத்து, 378 ரன் என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. ஜடேஜா வீசிய 28வது ஓவரின் 5வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பவுலை தோனி ஸ்டம்பிங் செய்தார். 

இந்த ஸ்டம்பிங்கை தோனி .08 நொடியில் மின்னல் வேகத்தில் செய்துள்ளார். இதற்கு முன்பு 0.09 நொடியில் ஸ்டம்பிங் செய்ததே தோனியின் சாதனையாக இருந்து வந்தது. இந்நிலையில், தனது முந்தையை சாதனையை தோனி முறியடித்துள்ளார்.

தோனியின் இந்த மின்னல் வேக ஸ்டம்பிங்கை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டி வருகிறார்கள். விக்கெட் கீப்பிங் பணிக்காகவாவது தோனி இந்திய அணியில் உலகக் கோப்பை வரை நீடிக்க வேண்டுமென்று பலரும் வலியுறுத்தியுள்ளனர். 

இந்தப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 153 ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணி 224 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com