ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு சீசன் ஐபிஎல் போட்டிகள் தொடர இருப்பதால் எதிர்பார்ப்புகள் எகிறி இருக்கிறது. இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு, இப்போது மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
இந்தியாவில் 29 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் மீதமிருக்கும் போட்டிகள் அமீரகத்தில் இருக்கும் அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் நடைபெற இருக்கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் 30-ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை - சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளின் முடிவில் நடப்பு சீசன் ஐபிஎல்லில் ரன்களை சேர்த்த டாப் 10 பவுலர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
ஹர்ஷல் படேல் - ஆர்சிபி: 7 போட்டிகள் 17 விக்கெட்டுகள், அதிபட்சமாக 27 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்
அவேஷ் கான் - டெல்லி கேப்பிடல்ஸ்: 8 போட்டிகள் 14 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்
கிறிஸ் மோரிஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ்: 7 போட்டிகள் 14 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்
ராகுல் சஹார் - மும்பை இந்தியன்ஸ்: 7 போட்டிகள் 11 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 27 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.
ரஷீத் கான் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 7 போட்டிகள் 10 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்.
சாம் கரண் - சிஎஸ்கே: 7 போட்டிகள் 9 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்.
பாட் கம்மின்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 7 போட்டிகள் 9 விக்கெட்டுகள் அதிகபட்சமாக 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்
கைல் ஜேமிசன் - ஆர்சிபி: 7 போட்டிகள் 9 விக்கெட்டுகள், அதிபட்சமாக 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள்.
தீபக் சஹார் - சிஎஸ்கே: 7 போட்டிகள் 8 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள்.
முகமது ஷமி - பஞ்சாப் கிங்ஸ்: 8 போட்டிகள் 8 விக்கெட்டுகள், அதிகபட்சமாக 21 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள்.