"நான் ஏழை; ஐபிஎல் சம்பளத்தால்தான் என் தந்தைக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது!" - சக்காரியா

"நான் ஏழை; ஐபிஎல் சம்பளத்தால்தான் என் தந்தைக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது!" - சக்காரியா
"நான் ஏழை; ஐபிஎல் சம்பளத்தால்தான் என் தந்தைக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது!" - சக்காரியா
Published on

ஐபிஎல்லில் பங்கேற்றதின் மூலம் கிடைத்த வருமானத்தால்தான் என் தந்தைக்கு கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ செலவை செய்து வருகிறேன் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியா தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின்போது அறிமுகமான சக்காரியா சிறப்பாக விளையாடினார். இதனால் பலரது கவனத்தையும் ஈர்த்தார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து இந்தாண்டு ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டது. இதனால் அனைத்து வீர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். அதேபோல சக்காரியாவும் சொந்த மாநிலமான குஜராத்துக்கு திரும்பினார்.

இந்நிலையில் சக்காரியாவின் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவருக்கு பாவ்நகரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.2 கோடி கொடுத்து அவரை ஏலத்துக்கு எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இது குறித்து இந்தியன் எஸ்ஸ்பிரஸ்க்கு மனம் திறந்து பேட்டியளித்துள்ளார் சக்காரியா.

அதில் "கடந்த சில நாள்களுக்கு முன்புதான் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் இருந்து எனக்கான தொகையில் இருந்து ஒரு பகுதி என் வங்கி கணக்குக்கு வந்தது. அதனை உடனடியாக என் குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்தேன். அந்தப் பணம் அப்போது என் குடும்பத்தினருக்கு தேவையாக இருந்தது. பலரும் ஐபிஎல் தொடரை நிறுத்துங்கள் என கூறுகிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என் குடும்பம் என் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டால் கிடைக்கும் ஊதியம் மட்டுமே என் வாழ்வாதாரம்" என்றார் சக்காரியா.

மேலும் "என் தந்தைக்கு ஐபிஎல்லால் கிடைத்த வருமானம் மூலமாகத்தான் சிறப்பான சிகிச்சையை கொடுக்க முடிந்தது. இந்தத் தொடர் நடைபெறாமல் போயிருந்தால் என்னுடைய நிலைமை மோசமாகி இருக்கும். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்துள்ளேன். என்னுடைய தந்தை டெம்போ ஓட்டுநர். இந்த ஐபிஎல்லால்தான் எங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறும் என்று நம்பினேன்" என்றார் சக்காரியா.

தொடர்ந்து பேசிய அவர் "என்னுடைய சமூகத்திலேயே நான்தான் இதுவரை அதிகம் சம்பாதித்து இருக்கேன். என்னுடைய தாயாருக்கு கோடியில் எத்தனை ஜீரோக்கள் இருக்கும் என்பது கூட தெரியாது. இப்போது எங்களுடைய முதல் முக்கியத்துவம் தந்தை நல்லபடியாக சிகிச்சை முடிந்து வீடு திரும்ப வேண்டும், அடுத்து பாதியில் நிற்கும் வீட்டை கட்டி முடிக்க வேண்டும். அதற்காகவாவது ஐபிஎல் மீண்டும் நடக்க வேண்டும்" என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் சக்காரியா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com