வங்கதேச தொடரில் இருந்து முகமது ஷமி திடீர் விலகல் - என்ன காரணம்?

வங்கதேச தொடரில் இருந்து முகமது ஷமி திடீர் விலகல் - என்ன காரணம்?
வங்கதேச தொடரில் இருந்து முகமது ஷமி திடீர் விலகல் - என்ன காரணம்?
Published on

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இருந்து காயம் காரணமாக முகமது ஷமி விலகியுள்ளார்.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்தியா -வங்கதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி , கேஎல் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர்.

இந்த நிலையில், வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளார் முகமது ஷமி விலகியுள்ளார் . பயிற்சியின்போது ஷமி காயம் அடைந்ததால் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. டெஸ்ட் தொடரிலும் அவர் ஆடுவது சந்தேகமே எனக் கூறப்படுகிறது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com