‘நாட்டை விட்டு வெளியேறச்சொன்ன விவகாரம்’ - கோலிக்காக குரல்கொடுத்த கைஃப்

‘நாட்டை விட்டு வெளியேறச்சொன்ன விவகாரம்’ - கோலிக்காக குரல்கொடுத்த கைஃப்
‘நாட்டை விட்டு வெளியேறச்சொன்ன விவகாரம்’ - கோலிக்காக குரல்கொடுத்த கைஃப்
Published on

இந்திய கேப்டன் விராட் கோலியின் மீது சிலர் வேண்டுமென்றெ தவறான கருத்தை சித்தரிப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

இந்திய கேப்டன் விராட் கோலி தனது 30வது பிறந்த நாளை அண்மையில் கொண்டாடினார். அவரது பிறந்த நாள் அன்று கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில், “அவர் (கோலி )மிகைப்படுத்தி காட்டப்படும் பேட்ஸ்மேன். அவரிடம் எந்தச் சிறப்பும் இல்லை. இந்த இந்தியர்களின் பேட்டிங்கை பார்ப்பதைவிட, ஆஸ்திரேலியர்கள் மற்றும் இங்கிலாந்து வீரர்களின் பேட்டிங்கை நான் ரசிக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

இதற்கு உடனே பதிலளித்த கோலி, நீங்கள் இந்தியாவில் எப்படி வசிக்கின்றீர்கள் என்பது தெரியவில்லை. நீங்கள் வேறு எங்காவது சென்று வாழுங்கள். மற்ற தேசத்தை விரும்பிக்கொண்டு, நீங்கள் ஏன் எங்கள் நாட்டில் வாழ்கிறீர்கள்? உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை என்பதை நான் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என கோபமாக பதிலளித்திருந்தார். இந்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்த, விராட் கோலிக்கு பிசிசிஐ தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. அத்துடன் நெட்டிசன்களும் கோலியை விமர்சித்தனர்.

இதனால் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் கிண்டல் செய்வது என்னை இல்லை என நினைக்கிறேன். கிண்டல்களை ஏற்க நான் தயாராக உள்ளேன். நான் ‘இந்த இந்தியர்கள்’ என அந்த நபர் குறிப்பிட்டது குறித்து தான் விமர்சித்தேன். மத்தபடி ஒன்றுமில்லை. நான் உட்பட அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது. அதையும் வெளிச்சமிட்டு காட்டுங்கள்” என விளக்கமளித்திருந்தார். 

இந்நிலையில் விராட் கோலிக்கு ஆதரவாக முகமது கைஃப் குரல் கொடுத்துள்ளார். சில வித சித்தாத்தங்களை கொண்டவர்கள் தான் கோலியின் மீது நியாயமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து, அவரது கருத்தை திரிப்பதாக கைஃப் தெரிவித்துள்ளார். அத்துடன், கோலி உலக அளவில் சிறந்த விளையாட்டு வீரர் தான் என்றும், அந்த சூழல் அவரை அப்படி கருத்து தெரிவிக்க வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் சிலர் அவரது கருத்தை தவறாக சித்தரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com