சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் 22 ஆண்டுகள் விளையாடிய முதல் வீராங்கனை - மித்தாலி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் 22 ஆண்டுகள் விளையாடிய முதல் வீராங்கனை - மித்தாலி
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் 22 ஆண்டுகள் விளையாடிய முதல் வீராங்கனை - மித்தாலி
Published on

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் களத்தில் 22 ஆண்டுகள் விளையாடிய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையானார் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ். இங்கிலாந்து அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் களம் கண்டதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார் அவர். 

38 வயதான அவர் இதுவரை 215 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 1999 ஜூனில் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக அறிமுக வீராங்கனையாக களம் இறங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது 215வது போட்டியில் அவர் 72 ரன்களை சேர்த்திருந்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி களத்தில் அவர் 7170 ரன்களை சேர்த்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com