இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த சில மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் விலகியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்கு பின்பு தோனி இந்தியாவுக்காக இன்னும் களமிறங்கவில்லை. வங்கதேசம் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 போட்டிகளுக்கு விக்கெட் கீப்பராக ரிஷப் பன்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியிலும் தோனி சேர்க்கப்படவில்லை.
அதேபோல இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். ஹர்திக் பாண்டியாவுக்கு அண்மையில் அறுவை சிகிக்சை நடந்தது.
தற்போது ஓய்வில் இருக்கும் ஹர்திக் பாண்டியா மருத்துவமனையில் இருந்தவாறே புகைப்படம் வெளியிட்டு அறுவை சிகிச்சை குறித்து டவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் “அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. உங்களின் ஆசிர்வாதங்களுக்கு என் நன்றிகள். விரைவில் திரும்புவேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி ஜிவாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஜிவாவை குறிப்பிட்டு "நான் இந்த சிறுமியை மிஸ் செய்கிறேன், பெரியவரையும் கூட (தோனியை குறிப்பிட்டு)" என பதிவிட்டிருந்தார். அதற்கு பல ரசிகர்கள் நாங்களும் மிஸ் செய்கிறோம் என பதிலளித்திருந்தனர்.