‘கேல் ரத்னா’ விருதை பெற்றார் விராட் கோலி

‘கேல் ரத்னா’ விருதை பெற்றார் விராட் கோலி
‘கேல் ரத்னா’ விருதை பெற்றார் விராட் கோலி
Published on

2018-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இன்று டெல்லியில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினர். தேசத்தின் உயரிய விளையாட்டு விருதான ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருது, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும், உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற மீரா பாய் சானு ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இதனைதொடர்ந்து ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, தடகளத்தில் முத்திரை பதித்த ஜின்சன் ஜான்சன், ஹிமா தாஸ், ஹாக்கி வீரர்-வீராங்கனையான மன்ப்ரீத் சிங், சவீதா, துப்பாக்கிச்சுடுதல் வீரர்-வீராங்கனைகளான அங்கூர் மிட்டல், ஷிரேயாஸி சிங், ராஹி சர்னோபத், வீராங்கனை மணிகா பத்ரா, டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, வுஷூ வீரர் பூஜா காடியன், பாரா ஒலிம்பிக் வீரர்களான அங்குர் தமா, மனோஜ் சர்க்கார் ஆகியோருக்கு அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன், மல்யுத்த வீரர் சுமித், போலோ வீரர் ரவி ரத்தோர், பேட்மிண்டன் வீராங்கனை சிக்கி ரெட்டி, கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, கால்ஃப் வீரர் ஷூபாங்கர் ஷர்மா ஆகியோருக்கும் அர்ஜூனா விருதுகள் வழங்கப்பட்டன. இதேபோல் துரோணாச்சார்யா விருது 8 பேருக்கும், தயான்சந்த் விருது 4 பேருக்கும் வழங்கப்பட்டன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com