திரும்பி வந்துட்டனு சொல்லு.. ஸ்டம்பை உடைத்த பும்ரா 

திரும்பி வந்துட்டனு சொல்லு.. ஸ்டம்பை உடைத்த பும்ரா 
திரும்பி வந்துட்டனு சொல்லு.. ஸ்டம்பை உடைத்த பும்ரா 
Published on

தனது பயிற்சியின் போது மிடில் ஸ்டேம்பை உடைத்த புகைப்படத்தை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வெளியிட்டுள்ளார். 

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதுகில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து வருகிறார். காயத்திற்கு பிறகு தற்போது மீண்டும் பும்ரா தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில், “என்னுடைய இன்றைய பயிற்சி நேரமும், நான் பயிற்சி செய்த ஸ்டேம்பும் முடிவுக்கு வந்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர் பயிற்சியின் போது உடைத்த மிடில் ஸ்டேம்ப் படத்தையும் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் ஜஸ்பிரித் பும்ரா காயம் குணம் அடைந்து மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர். இவர்கள் மூவரும் சேர்ந்து இந்தத் தொடரில் 33 விக்கெட்களை கைப்பற்றியுள்ளனர். இவர்களுடன் மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இணையும் பட்சத்தில் இந்திய அணி மேலும் வலுப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com