அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் மைக்கல் ஜோர்டன் பயன்படுத்திய ஷூ ரூ.4.6 கோடிக்கு ஏலம் சென்று பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டனுடைய ஷூ இது. 1985 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற ஒரு விளையாட்டு போட்டியின் போது மைக்கேல் ஜோர்டான் இந்த காலணிகளை அணிந்திருந்தார். 35 ஆண்டு பழமையான இந்த ஷூவின் மீது மைக்கேல் ஜோர்டான் தனது கையெழுத்தையும் போட்டுள்ளார். அந்த ஷூவுக்கு சுமார் 4.6 கோடி ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டதாக கிறிஸ்டி ஏல நிறுவனத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைக்கல் ஜோர்டனின் இன்னொரு ஷூ சுமார் 4.25 கோடி ரூபாய்க்கு ஏலம் கோரப்பட்டதாக சோதேபி (Sotheby’s) ஆன்லைன் வலைத்தளம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிக பிரபலமான கூடைப்பந்து வீரரான மைக்கேல், 1985 ஆம் ஆண்டில் நடைப் பெற்ற ஒரு போட்டியின் போது “நைக் ஏர் 1”(Nike Air1) என்ற இந்த சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஷூவை அணிந்திருந்தார். இந்த ஷூவின் ஒரு ஷீவின் அளவு 13 இன்ச் என்பதும், மற்றொரு ஷீவின் அளவு 13.5 இன்ச் என்பதும் இந்த விலையுயர்ந்த காலணியின் சிறப்பம்சம்.