தோனியிடம் இருக்கும் ஸ்பெஷல் என்ன ? - ரகசியம் உடைத்த மைக்கெல் ஹஸ்சி

தோனியிடம் இருக்கும் ஸ்பெஷல் என்ன ? - ரகசியம் உடைத்த மைக்கெல் ஹஸ்சி
தோனியிடம் இருக்கும் ஸ்பெஷல் என்ன ? - ரகசியம் உடைத்த மைக்கெல் ஹஸ்சி
Published on

எம்.எஸ்.தோனி எப்படி அனைத்து நேரங்களிலும் சிறந்த ஃபினிஷராக இருக்கிறார் என்பதை ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கெல் ஹஸ்சி மனம் திறந்து கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி வரலாற்றில் கண்ட பெஸ்ட் ஃபினிஷர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மைக்கெல் ஹஸ்சி. ஆட்டம் எவ்வளவு தான் கைமீறி போய்விட்டது என்ற நிலை வந்தாலும், இறுதிவரை நிலைத்து ஆடி பல போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய இவர், சென்னைக்கும் சில முக்கிய போட்டிகளில் வெற்றியை தேடித் தந்துள்ளார். இத்தகைய பெஸ்ட் ஃபினிஷரான மைக்கெல் ஹஸ்சி, தோனியை கிரிக்கெட் உலகின் பெஸ்ட் ஃபினிஷர் என வர்ணித்துள்ளார்.

இஎஸ்பிஎன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சை மஞ்சரேகருடன் கலந்துரையாடிய ஹஸ்சி, தோனி தொடர்பான பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய ஹஸ்சி, “கிரிக்கெட் உலகம் தோன்றியதிலிருந்து அனைத்து காலத்திலும் பெஸ்ட் ஃபினிஷர் என்றால் அது தோனி தான். அவர் கூலாக இருந்தே எதிரணியின் கேப்டனை வியக்கச்செய்வார். அத்துடன் தோனி அசாத்திய சக்தி கொண்டவர். அவருக்கு எப்போது போட்டியில் தடைகளை உடைக்க வேண்டும் எனத்தெரியும். அதை உடைக்கவும் முடியும். அவருக்கு அந்த அளவிற்கு தன்னம்பிக்கை இருக்கிறது. உண்மையை சொல்லவேண்டுமென்றால் என்னிடம் அது இல்லை” என மனம் திறந்துள்ளார்.

மேலும், “ஒரு ஓவரில் 12 அல்லது 13 ரன்கள் எடுக்க முயற்சித்தும் என்னால் முடியவில்லை. அதை நான் தோனியிடம் கற்றுக்கொண்டேன். அவர் கணிக்கமுடியாதவர். அனைவரும் வெற்றியை இழந்துவிடுவோம் என நினைக்கும்போது அவர் நம்பிக்கொண்டிருப்பார். அதனாலேயே அவர் கூலாக இருப்பார். அவ்வாறு அவர் இருப்பது பவுலர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தாது. தோனியும், ரிக்கி பாண்டிங்கும் தோற்றுவிடுவோம் என தெரிந்துவிட்டால், போட்டியை இழுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். உடனே முடித்துவிடுவார்கள். வெற்றியா ? தோல்வியா ? என நினைத்து குழம்பிக்கொண்டிருக்க மாட்டார்கள் ” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com