பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் ரஃபேல் நடாலுக்கு எதிரான ஆட்டத்தில் மெக்கன்சி மெக் டொனால்ட் அண்டர் ஆர்ம் சர்வீஸ் செய்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினின் நடாலும், அமெரிக்காவின் மெக் டொனல்டும் மோதினர். இரண்டாவது செட்டை 0-4 என மெக் டொனால்ட் இழந்திருந்த நிலையில் ஐந்தாவது சர்வீஸை அவர் ஸ்பூன் சர்வீஸ் என சொல்லப்படும் அண்டர் ஆர்ம் சர்வீஸ் ஆட அதை அசால்ட்டாக எதிர்த்து ஆடினார் நடால்.
கிரிக்கெட்டில் மன்கட் முறை அவுட் எப்படி ஸ்பிரிட் ஆப் கேமை குலைக்கிறதோ அதே போல அண்டர் ஆரம் சர்வீஸ் கேம் ஸ்பிரிட்டை குலைகின்ற செயல் என விமர்சகர்கள் சொல்வது உண்டு. அதே நேரத்தில் கிராண்ட் ஸ்லேம் தொடர்களில் புள்ளிகளை இழக்கும் போது விரக்தியில் வீரர்கள் அண்டர் ஆர்ம் சர்வீஸ்களை அடிப்பது வாடிக்கை எனவும் சொல்லப்படுகிறது.