ஸ்டீவ் ஸ்மித் அடித்த ரன்னை தாண்டிய மயங்க் அகர்வால்

ஸ்டீவ் ஸ்மித் அடித்த ரன்னை தாண்டிய மயங்க் அகர்வால்
ஸ்டீவ் ஸ்மித் அடித்த ரன்னை தாண்டிய மயங்க் அகர்வால்
Published on


இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா மற்றும் மயாங்க் அகர்வால் சிறப்பான தொடக்கத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சதம் அடித்தனர். ரோகித் ஷர்மா 176 (244) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து விளையாடிய மயாங்க் இரட்டை சதம் அடித்து அசத்தினார். பின்னர் 215 (371) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 502 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. 

இந்தப் போட்டியில் 215 ரன்கள் சேர்த்தன் மூலம் தனது முதல் சதத்தை இரட்டை சதமாக மாற்றிய நான்கவது இந்திய வீரர் என்ற சாதனை மயங்க் அகர்வால் படைத்துள்ளார். அத்துடன் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தனி நபராக ஒருவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆஷஸ் தொடரின் போது அடித்த 211 ரன்கள்தான், அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. மயங்க் அகர்வால் இதனை தற்போது முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 5 வீரர் என்ற பெருமையை மயங்க் அகர்வால் பெற்றுள்ளார். இந்தாண்டு டெஸ்ட் போட்டியில் ஜேசன் ஹோல்டர் (202*), கேன் வில்லியம்சன்(200*), ஸ்டீவ் ஸ்மித்(211),ராஸ் டெய்லர்(200) ஆகிய நான்கு பேர் மயங்க் அகர்வாலுக்கு முன் இரட்டை சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com