பங்களாதேஷ் தேர்தல்: கிரிக்கெட் வீரர் மோர்டாஸா அபார வெற்றி!
பங்களாதேஷ் தேர்தலில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் மோர்டாஸா, அதிக வாக்குக் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் மஷ்ரஃப் மோர்டாஸா. ஆல் ரவுண்டரான இவர், அங்கு நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்த லில், பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி சார்பில் போட்டியிட்டார். தெற்காசியாவில் கிரிக்கெட் வீரர்கள், அரசியலில் ஈடுபடுவது புதிதில்லை என்றாலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகுதான் ஈடுபடுவார்கள். அணியில் இருக்கும் வீரர் ஒருவர், அரசிய லில் களமிறங்குவது இதுதான் முதல் முறை.
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் ஜலால் யூனுஸ் இதுபற்றி கூறும்போது, ‘கிரிக்கெட் வீரர்கள், அரசியலில் ஈடுபட தடை ஏதும் இல்லை. தேர்தலில் போட்டியிட எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை அவர் பயன்படுத்த விரும்பினால், அதனால் பிரச்னை இல்லை’ என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, ‘அரசியலில் இறங்காமல் நாட்டின் முன்னேற்றத்துக்கான பணிகளை செய்ய முடியாது என்று எப்போதும் நம்புவேன். இப்போது நல்லது செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் தேர்தலில் போட்டியிடுகிறேன்’ என்று தெரிவித்திருந்தார் மோர்டாஸா.
அதன்படி அவர், நரேல் 2 தொகுதியில் போட்டியிட்டார். நேற்று வாக்குப்பதிவு நடந்தது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டன. அவாமி லீக் கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது.
மோர்டாஸாவும் யாரும் எதிர்பார்க்காத வகையில், 2 லட்சத்து 74 ஆயிரத்து 418 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டி யிட்ட ஜதியா ஒய்கியா முன்னணி வேட்பாளர் ஃபரிதுஸாமன் வெறும் 8 ஆயிரத்து ஆறு வாக்குகளை மட்டுமே பெற்றார்.
மோர்டாஸா, உலகக் கோப்பை தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 2009 ஆம் ஆண்டில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. 199 ஒரு நாள் போட்டிகளில் விளை யாடியுள்ள மோர்டாஸா, 252 விக்கெட்டுகளையும் 1722 ரன்களையும் எடுத்துள்ளார்.