"பிறரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்" - நிஹாத் ஜரீன் மீது மேரி கோம் காட்டம்

"பிறரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்" - நிஹாத் ஜரீன் மீது மேரி கோம் காட்டம்
"பிறரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்" - நிஹாத் ஜரீன் மீது மேரி கோம் காட்டம்
Published on

நிஹாத் ஜரீன் மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு 51 கிலோ எடைப்பிரிவில் யாரை அனுப்புவது என்ற இறுதிப்போட்டியி‌ல் இளம் வீராங்கனை நிஹாத் ஜரீனும், மேரி கோமும் மோதினர். இதில், நிஹாத் ஜரீனை 9 - 1 என்ற புள்ளி கணக்கில் எளிதில் வீழ்த்தி மேரி கோம் அபார வெற்றி பெற்றார். முன்னதாக, மேரி கோம் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறுவதாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் அறிவித்ததற்கு இளம் வீராங்கனை நிஹாத் ஜரீன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் பங்கேற்கும் வீராங்கனையை தேர்வு செய்ய போட்டி நடத்தப்பட்டது. வெற்றிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மேரி கோம், திறமையை களத்தில் மட்டுமே நிரூபிக்க வேண்டுமென தெரிவித்தார். இந்தப் போட்டியில் முடிவில் மேரி கோம், நிஹாத் ஜரீனிடம் கைகுலுக்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இது குறித்து பேசிய மேரி கோம் " நான் ஏன் அவரிடம் கைகுலுக்க வேண்டும். முதலில் அவர் மற்றவர்களை மதித்து நடக்க கற்றுக்கொள்ள வேண்டும். திறமையை களத்தில் மட்டுமே காட்ட வேண்டும், வெளியே அல்ல" என்றார். எனினும், மேரி கோமின் இந்த நடவடிக்கை தனக்கு மிகவும் மன வேதனையளித்தாக நிஹாத் ஜரீன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com