ஒலிம்பிக் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்கனை மேரிகோம் தகுதிப் பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான தகுதிச் சுற்றில், 51 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க உள்ள வீராங்கனையை தேர்வு செய்யும் போட்டியில் இருவரும் மோதினர். இதில் 23 வயதான நிகாத் ஜரினை தோற்கடித்த 36 வயதான மேரி கோம், ஒலிக்பிக் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றார். முன்னதாக, மேரி கோம் ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறுவதாக இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் அறிவித்ததற்கு இளம் வீராங்கனை நிகாத் ஜரின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்கும் வீராங்கனையை தேர்ந்தெடுக்கும் போட்டியில் மேரிகோம் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது.