பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் பெரியவடுகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, பிரேசிலின் ரியோ நகரில் நடந்த பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அவரைக் கவுரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல ஒலிம்பிக் ஜிம்னாஸ்ட்டிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமை பெற்ற தீபா கர்மாகருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல எய்ட்ஸ் நோய் தடுப்பு ஆய்வுக்காக தமிழகத்தைச் சேர்ந்த காலம்சென்ற மருத்துவர் சுனிதி சாலமோனுக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த களரி பயிற்றுநர் மீனாட்சி அம்மாள் உள்பட மொத்தம் 20 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் இந்தாண்டு வழங்கப்பட இருக்கிறது.