பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனாவுக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரர் மாரடோனா உடல்நலக்குறைவால் அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அர்ஜென்டினாவில் உள்ள லா பிளேடாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து மாரடோனாவுக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த உறைவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் "மாரடோனாவுக்கு நாள்பட்ட ரத்தக்கட்டி, வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மாரடோனா, நான்கு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 1986 இல் மாரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றது. அப்போட்டியின் சிறந்த வீரராகவும் தேர்வானார். அர்ஜென்டினா அணிக்காக 91 போட்டிகளில் விளையாடி 34 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.