இங்கிலாந்தின் பிரபல தொழில்முறை கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் கொரோனா தாக்கத்தினால் சுமார் 30.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனாவினால் இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டிக்கான அட்டவணைகள் மூன்று மாத காலம் வரை தள்ளிப்போனதும், ரசிகர்கள் போட்டிகளை காண அனுமதிக்கப்படாததும் இந்த இழப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளது மான்செஸ்டர் யுனைடெட்.
கடுமையான கட்டுப்பாட்டினால் இந்த ஆண்டு வருவாயில் சுமார் 70 மில்லியன் பவுண்டுகளை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் ஜூலை முதல் ஆகஸ்ட் வரையில் சுமார் 30 மில்லியன் பவுண்டுகளை தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் ஈடு செய்துள்ளதாகவும் கிளப் சொல்லியுள்ளது.
இப்போது வரை கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் பிரிட்டனில் தொடருவதால் மைதானத்தில் ரசிகர்களின் வருகையை தாமதப்படுத்தி உள்ளதாகவும், அதனால் போட்டி நாளன்று விற்பனையாகும் டிக்கெட் மற்றும் கேட்டரிங் விற்பனையிலும் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மற்ற ஐரோப்பிய நாடுகளில் ரசிகர்களை ஆட்டத்தை காண அனுமதிப்பதை போல பிரிட்டனிலும் செய்ய வேண்டுமென அரசுக்கு கால்பந்தாட்ட கழகங்கள் கோரிக்கை வைத்துள்ளன.