'என் மனைவியின் வார்த்தைகள் தோனியை தூங்கவிடவில்லை' - முதல் ஸ்பான்சர் பகிர்ந்துகொண்ட கதை!

'என் மனைவியின் வார்த்தைகள் தோனியை தூங்கவிடவில்லை' - முதல் ஸ்பான்சர் பகிர்ந்துகொண்ட கதை!
'என் மனைவியின் வார்த்தைகள் தோனியை தூங்கவிடவில்லை' - முதல் ஸ்பான்சர் பகிர்ந்துகொண்ட கதை!
Published on

தோனி ஓய்வு முடிவை அறிவித்ததையடுத்து BAS பேட் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சோமி கோலி தோனியுடனான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய சோமி கோலி “ தோனிக்கு ஸ்பான்ஸர் ஷிப் செய்யும்படி எனது டீலர்களில் ஒருவரான பரம்ஜீத் சிங் என்னை தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருந்தார். இந்த நச்சரிப்பு கிட்டத்தட்ட 6 மாதங்களாகத் தொடர்ந்தது. அதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு நான் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினேன்.

 நான் அவரை கடந்த 2004 ஆம் ஆண்டு சண்டீகரில் சந்தித்தேன். அதன் பின்னர் அவர் அதே ஆண்டு பங்களாதேஷூக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் சிறிது காலத்திற்கு பிறகு அவர் எனது தொழிற்சாலைக்கு வந்தார். அப்போது என்னிடம் அவர் தரமான பேட்டுகளை கேட்டார். உடனே அவரை நான் அன்று எனது வீட்டிலேயே தங்கும்படி கூறினேன். அப்போது நான் எனது மனைவியிடம் அவரை அறிமுகப்படுத்திய போது, எனது மனைவி மஞ்சூ கோலி தோனி யார் என்று தெரியவில்லை என்று கூறினார். அப்போது அவர் அவ்வளவாக அறியப்படாதத்தருணம்.

ஆனால் எனது மனைவி அவ்வாறு கேட்டது தோனியை வெகுவாக பாதித்து விட்டது. அடுத்த நாள் தோனி என்னிடம் “உங்களது மனைவியின் வார்த்தைகள் என்னை தூங்கவிடவில்லை என்றும் வெகு நேரமாக அவர் சொன்ன வார்த்தைகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தேன்” என்றும் கூறினார்.

அதன் பின்னர் பாகிஸ்தான் போட்டியில் கலந்து வியக்கத்தக்க வகையில் விளையாடிய அவர் அன்று இரவு 11 மணி என்னை தொலைபேசி வழியாக அழைத்து மஞ்சுவிடம் பேச வேண்டும் என்று கூறினார். மஞ்சுவிடம் பேசிய அவர் “ ஆண்டி எனது பெயர் தோனி என்றார். அதற்கு என் மனைவி பேட்டா இப்போது உனது பெயரை உலகமே சொல்லிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com