"பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்யுங்கள்" நீதிமன்றத்தில் ரசிகர் வழக்கு

"பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்யுங்கள்" நீதிமன்றத்தில் ரசிகர் வழக்கு
"பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்யுங்கள்" நீதிமன்றத்தில் ரசிகர் வழக்கு
Published on

கடந்த 16ஆம் தேதி நடந்து முடிந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகக் கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர்ந்து 7வது முறையாக இந்தத் தோல்வியை சந்திக்கிறது. இந்தத் தோல்வியை பாகிஸ்தான் ரசிகர்கள் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் அணியினரை ரசிகர்கள் கடுமையாக சாடினர். இதுதவிர வாசிம் அக்ரம் மற்றும் அக்தர் உள்ளிட்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும், கேப்டனுக்கு எதிராகவும் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் குஜ்ரன்வாலா கீழமை நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில் "பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டுமென்றும், மேலும் இப்போதுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள தேர்வுக் குழுவினை முழுமையாக கலைக்க வேண்டும்" என நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக விளக்கமளிக்க பாகிஸ்கான் கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 

இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவராக இருப்பவர் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக். ஒட்டுமொத்த பாகிஸ்தான் ரசிகர்களும் இப்போது அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் 9 ஆவது இடத்தில் இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இதில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர், அணியின் மேலாளர் தாலத் அலி, பந்துவீச்சு பயிற்சியாளக் அசார் மகமூத் ஆகியோரும் விரைவில் பதவியிலிருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வக்கார் யூனிஸ், "இந்திய வீரர்களுக்கு இணையாக உடல் தகுதியுடன் பாகிஸ்தான் வீரர்கள் இல்லை. அவர்கள் இந்திய அணியை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டும் என அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் போட்டியில் அழுத்தத்துடன் விளையாடினர். ஆனால் இந்தியா எளிமையாக விளையாடி வென்றுள்ளனர்” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com