உலகக் கோப்பையை வெல்லும் அளவுக்கு தரமான வீரர்கள் இந்திய அணியில் இருப்பதாக தெரிவித்துள்ளார் ஜெயவர்தனே.
டி20 உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய அணி கோப்பையை வெல்லும் என்று நம்பிக்கையுடன் வீரர்கள் உள்ள சூழலில் அதற்கான சில முக்கிய காரணங்களை இலங்கை அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மகிளா ஜெயவர்தனே சுட்டிக்காட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பலம். ஆசிய கோப்பை தொடரில் பும்ரா இல்லாத குறையை இந்திய அணி உணர்ந்தது. டி20 உலகக்கோப்பை தொடரில் அந்த குறை நீங்கும். ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது மகிழ்ச்சியான விஷயம். விராட் கோலியின் இருப்பு எதிரணியினருக்கு கவலை அளிக்கும் விஷயமாக இருக்கும். உலகக்கோப்பையை வெல்லும் அளவுக்கு தரமான வீரர்கள் இந்திய அணியில் இருப்பதாக நான் நினைக்கிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: 17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி!