இந்த ஐபிஎல் தொடரில், நியூசிலாந்து வீரர் லாக்கி ஃபெர்குசான் (Lockie Ferguson) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் வைத்திருக்கிற மீசை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 1960-களில் கார்டூன் வில்லன்கள் வைத்திருப்பது போன்ற மீசையுடன் வலம் வருடம் அவரிடம், ‘’ஏன் இந்த மீசை, ஆசை?’’ என்று கேட்டால் பெரிய காரணம் சொல்கிறார்.
’’இந்தியாவில் மூவெம்பர் (Movember) பற்றி தெரியுமா? எனத் தெரியவில்லை. அதாவது ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நவம்பர் மாதம் மனித உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மீசை வளர்ப்பது வழக்கம். (moustache -ல் உள்ள Mo, நவம்பரில் (November) உள்ள vember ஆகியவற்றை இணைத்து மோவெம்பர் என்ற வார்த்தை உருவாக்கப்பட்டுள்ளது).
அதாவது இதன் நோக்கம் மனித உடலின் முகத்தை மாற்றுவது. அதற்காக மீசை வளர்க்கிறேன். இதை எத்தனை பேர் விரும்புவார்கள் என்று தெரியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் இதை விரும்புகிறேன். சிலர் இதைப் பார்த்து சிரிப்பார்கள். பெரிய திரையில், என்னை மீசையுடன் பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்திய வீரர் ஷிகர் தவான் பெரிய மீசை வைத்திருந்ததைப் பார்த்தேன். நான் மீசை வைத்திருப்பேன் என்றாலும் அவர் திருக்கி விட்டிருப்பார். நியூசிலாந்துக்கு அவர் வந்தபோது அவர் மீசையின் ரசிகனாகிவிட்டேன். அதே போல திருக்கிவிட வேண்டும் என்று நினைத்து இந்த வருடம் இப்படி வைத்திருக்கிறேன்.
டெல்லி அணிக்கு எதிராக விளையாடும் போது இதுபோல திருக்கிய மீசையை வைக்குமாறு தவானிடம் வலியுறுத்துவேன். ஆனால், இதை பாதுகாப்பது கடினமாக இருக்கிறது’’ என்கிறார் ஃபெர்குசான்.