பிரான்ஸ் நாட்டில் தற்போது பிரெஞ்சு லீக் கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது . இத்தொடரில் அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, Paris Saint-Germain கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற Nice அணிக்கெதிரான போட்டியில் மெஸ்ஸியின் பாரிஸ் செயின்ட் - ஜெர்மைன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பிரெஞ்சு லீக்கில் கடந்த ஒரு வாரமாக மெஸ்ஸி ஒரு கோல் கூட அடிக்காததால் அவருடைய ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்றைய போட்டில் அசத்தலாக ஒரு கோல் அடித்து ஃபார்முக்கு திரும்பினார் மெஸ்ஸி.
மேலும் அந்த கோல் மூலம் ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் மெஸ்ஸி படைத்திருக்கிறார்
போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 701 கோல் அடித்திருந்த நிலையில் மெஸ்ஸி 702 கோல்கள் அடித்திருக்கிறார். ரொனால்டோவை விட 105 போட்டிகள் குறைவாக விளையாடி அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.