சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்சி புதிய சாதனை

சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்சி புதிய சாதனை
சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்சி புதிய சாதனை
Published on

சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த தென் அமெரிக்க வீரர் என்ற சாதனையை லயோனல் மெஸ்சி படைத்துள்ளார்.

பியூனஸ் அயர்ஸ் நகரில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று போட்டியில் அர்ஜென்டினா மூன்றுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் பொலிவியா அணியைத் தோற்கடித்தது. அர்ஜென்டினா அணிக்கான மூன்று கோல்களையும் கேப்டன் லயோனல் மெஸ்சியே அடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். இவற்றையும் சேர்த்து சர்வதேசப் போட்டிகளில் அர்ஜென்டினாவுக்காக மெஸ்சி அடித்திருக்கும் கோல்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

இதன்மூலம் சர்வதேசப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த தென் அமெரிக்க வீரர் என்ற பெருமையும் மெஸ்சிக்கு கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் 77 கோல்கள் அடித்து பிரேசில் வீரர் பீலே படைத்திருந்த சாதனையை மெஸ்சி தற்போது முறியடித்துள்ளார். பீலே 92 போட்டிகளில் 77 கோல்கள் அடித்திருந்தார். அதேவேளையில் மெஸ்சி 153 ஆட்டங்களில் விளையாடி பீலேவின் சாதனையை முறியடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com