பார்முலா 1 கார் பந்தயம்- 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற லூயிஸ் ஹாமில்டன்

பார்முலா 1 கார் பந்தயம்- 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற லூயிஸ் ஹாமில்டன்
பார்முலா 1 கார் பந்தயம்- 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்ற லூயிஸ் ஹாமில்டன்
Published on

கார்பந்தைய வீரர் லூயிஸ் ஹாமில்டன் 7-வது முறையாக பார்முலா 1 சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 35 வயதான லூயிஸ் ஹாமில்டன் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பார்முலா 1 கார்பந்தைய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 7 வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் இவர், தற்போது ஜெர்மனியின் மைக்கேல் ஷூமேக்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

2008, 2014, 2015, 2017, 2018,2019 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். 2008ல் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற லூயிஸ், பார்முலா 1 இல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை மிக இளம் வயதில் வென்ற வீரர் என்ற சிறப்புக்குச் சொந்தக்காரர் ஆனார்.

இந்த வெற்றி குறித்து அவர் கூறும் போது “ பெருங்ககனவுகளை அடைய இயலாது என நினைக்கு அனைத்து குழந்தைகளுக்கும் இந்த வெற்றி ஒரு உதாரணமாக இருக்கும். நிச்சயம் உங்களால் முடியும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com