இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் அணியின் பவுலர் யார்க்கர் வீச பேட்ஸ்மேன் பிட்சில் விழ, ஸ்டம்புகள் பறக்கும் வீடியோ இப்போது கிரிக்கெட் உலகில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து கவுண்ட்டி அணியான யார்க்ஷயரைச் சேர்ந்த மேத்யூ ஃபிஷர் என்ற மித வேகப்பந்து வீச்சாளர் ஸ்லோ இன்ஸ்விங் யார்க்கரை வீசினார். அப்போது அதனை தடுக்க முயன்ற டர்ஹாம் அணியின் பேட்ஸ்மேன் கீழ விழ, மூன்றில் இரண்டு ஸ்டம்புகள் காற்றில் பறந்தன. இந்த ஸ்லோ யார்க்கர் பந்தை யார்க்ஷயர் கவுண்ட்டி அணி தன் ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளது.
1985 மினி உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீரர் காசிம் ஓமருக்கு கபில் வீசிய யார்க்கரை இன்று வரை மறக்க முடியாது. அதே போல் 1983 ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மே.இ.தீவுகள் பேட்ட்ங் ஆகிருதி விவ் ரிச்சர்ட்ஸுக்கு ஒரு ஓவர் முழுக்க யார்க்கராக வீசினார் கபில்தேவ், அந்த ஓவரின் முடிவில் ரிச்சர்ட்ஸின் மட்டை கீழே லேசாக உடைந்ததை அவரே கபிலிடம் சிரித்தபடி காட்டியதும் நடந்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து கவுண்ட்டி கோப்பை போட்டியில் யார்க்ஷயர் பவுலர் மேத்யூ ஃபிஷர் டர்ஹாம் அணி பேட்ஸ்மன் ஜாக் பர்ன்ஹாமுக்கு ஒரு ஸ்லோ யார்க்கரை வீசி பேட்ஸ்மேன் கீழே விழுந்து ஸ்டம்ப் பறந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.