’இந்தியாவை அப்படி சொல்லாதீங்க’: பாகிஸ்தான் கேப்டன் பேட்டி

’இந்தியாவை அப்படி சொல்லாதீங்க’: பாகிஸ்தான் கேப்டன் பேட்டி
’இந்தியாவை அப்படி சொல்லாதீங்க’: பாகிஸ்தான் கேப்டன் பேட்டி
Published on

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வேண்டுமென்ற தோற்றதாகச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்தார். 

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று போட்டிகளோடு பாகிஸ்தான் அணி வெளியேறியது. லீக் சுற்று போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை வென்றிருந்தால் பாகிஸ்தான் அணி, அரையிறுதி சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்திருக் கும். ஆனால், அந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றது. பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை சிதைக்கும் வகையில் இந்திய அணி வேண்டுமென்றே இந்த ஆட்டத்தில் தோற்றதாக, வாக்கர் யூனிஸ் உட்பட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்தில் இருந்து சொந்த நாட்டுக்கு நேற்றுத் திரும்பியது. கராச்சியில் செய்தியாளர் களிடம் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமதுவிடம் இந்தக் கருத்துபற்றி கேட்டபோது, ‘’ இந்திய அணி வேண்டு மென்றே இங்கிலாந்திடம் தோற்றதாக நினைக்கவில்லை. அப்படி சொல்வது சரியானதல்ல. இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியதால் வெற்றி பெற்றது’’ என்றார். 

’’பெங்காலி’-க்கு எதிரான போட்டியில் சோயிப் மாலிக்கிற்கு ஏன் கடைசி போட்டி வாய்ப்பு வழங்கப்படவில்லை’’ என்று செய்தி யாளர் ஒருவர் கேட்டதற்கு, சர்பிராஸ் ‘பெங்காலி’ என்ற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள், பங்களாதேஷ் என்று அழையுங் கள் என்றார். பின்னர், ’’சோயிப் மாலிக் நம் நாட்டுக்காக சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். அவர் அணியில் இருந்தது, எங்களுக்கு உதவியாக இருந்தது’’ என்றார். 

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியதை அடுத்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்வீர்களா? என்று கேட்டதற்கு ’’அது என் கையில் இல்லை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்தான் என்னை கேப்டனாக நியமித்தது’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com