KXIP VS MI : டாப் 10 தருணங்கள்

KXIP VS MI : டாப் 10 தருணங்கள்
KXIP VS MI : டாப் 10 தருணங்கள்
Published on

அபுதாபியில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் மும்பை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


இந்த ஆட்டத்தின் டாப் 10 தருணங்கள்.


1. டிகாக்கை போட்டு தள்ளிய காட்றல்

பஞ்சாப் டாஸ் வென்றதும் முதலில் பவுலிங் செய்ய உள்ளதாக சொன்னார் பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல். வழக்கம் போல இந்த ஆட்டத்திலும் டாஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என எதிர்பார்த்த நிலையில் அது பஞ்சாப் அணிக்கு பெஸ்ட் சாய்ஸாக முதல் ஓவரிலேயே அமைந்தது. மும்பை அணியின் டிகாக்கை ஐந்தே பந்துகளில் பெவிலியனுக்கு அனுப்பினார் பஞ்சாப் அணியின் பவுலர் காட்றல். முதல் பந்து குட் லெந்த், அதற்கடுத்து ஷார்ட் லெந்த், ஒரு ஃபுள் லெந்த், மீண்டும் ஷார்ட் லெந்த், கடைசியாக ஐந்தாவது பந்தில் டிகாக்கின் பேட்டை தாண்டி சென்ற பந்து ஆப் ஸ்டெம்பை காலி செய்தது. முதல் ஓவரையே விக்கெட் மெய்டனாக வீசி அசத்தியிருந்தார் காட்றல்.


2. ஐபிஎல் போட்டிகளில் ரோகித் 5000 ரன்கள்

ஐபிஎல் வரலாற்றில் மொத்தமாக 4998 ரன்களை இந்த ஆட்டத்திற்கு முன்பு வரை ஸ்கோர் செய்திருந்தார் ரோகித் ஷர்மா. மேலும் 2 ரன்களை அடித்ததால் ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற மைல் கல்லை ரோகித் எட்டினார். இந்த இன்னிங்சின் முதல் பந்திலேயே கவர் திசையில் பவுண்டரி அடித்து 5000 ரன்களை ஸ்கோர் செய்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

3. சூர்யகுமார் யாதவ் ரன் அவுட்

ஆட்டத்தின் நான்காவது ஓவரில் பிஷோனி வீசிய ஐந்தாவது பந்தை லெக் சைடில் ஸ்வீப் அடித்த ரோகித் ஷர்மா ஒரு ரன் எடுக்க முயன்ற போது ஷமி அடித்த டைரக்ட் ஹிட் ஸ்டெம்புகளை காலி செய்ய நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்து ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு ஓட முயன்ற சூர்யகுமார் யாதவ் ரன் அவுட்டாகி வெளியேறினார்.


4. சுழலில் சிக்கிய இஷான் கிஷன்

கடந்த ஆட்டத்தில் தனது ஆட்டத்தின் மூலம் மாஸ் காட்டிய இஷான் கிஷன் இந்த ஆட்டத்தில் நிதானமாக ஆடி 32 பந்துகளில் வெறும் 28 ரன்களை மட்டுமே குவித்திருந்தார்.
தனது இன்னிங்ஸை அதிரடி கியருக்கு மாற்ற முயன்ற போது கிருஷ்ணப்ப கவுதம் வீசிய பந்தை சிக்ஸர் அடிக்க முயன்று டீப்பில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கருண் நாயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கிஷன்.


5. பொல்லார்ட் அதிரடி

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான பொல்லார்ட் வெறும் 20 பந்துகளில் 47 ரன்களை குவித்து ஸ்கோர் போர்டில் 191 என்ற பெரிய ஸ்கோரை எட்ட ட்ரம்ப் கார்டாக பேட்டிங்கில் மிரட்டியிருந்தார். அவரது இன்னிங்ஸில் 4 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.


6. பாண்டியா : மின்னல் வேக 30

காயத்தினால் அவதிப்பட்டு பார்ம் அவுட்டான பாண்டியா இந்த போட்டியில் தனது பார்மை மீட்டெடுத்து வந்துள்ளார். 11 பந்துகள் மட்டுமே விளையாடி மின்னல் வேகத்தில் 30 ரன்களை குவித்திருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 271. 23 பந்துகளில் 67 ரன்களை பாண்டியாவும், பொல்லார்டும் குவித்தனர்.

7. க்ளீன் போல்டான பஞ்சாப் அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்

பஞ்சாப் அணியின் பலமே அதன் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் தான். ஆனால் கே.எல் ராகுல், மாயங் அகர்வால் மற்றும் கருண் நாயர் என பஞ்சாப் அணியின் டாப் மூன்று பேட்ஸ்மேன்களும் க்ளீன் போல்டாகி வெளியேறினர்.

8. நம்பிக்கை கொடுத்த பூரன்

பஞ்சாப் அணியின் பவர் ஹிட்டர்களில் ஒருவரான நிக்கோலஸ் பூரன் மட்டும் 27 பந்துகளில் 44 ரன்களை குவித்தார். பெரிய இலக்கை பஞ்சாப் சேஸ் செய்யும் போது பூரன் அல்லது மேக்ஸ்வெல்லின் பேட்டிலிருந்து அதிக ரன்கள் வர வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்லியிருந்தனர். அதை போலவே பூரன் நல்ல இன்னிங்ஸை ஆடியிருந்தார்.


9. பும்ரா

டி20 போட்டிகளில் தான்தான் சிறந்த பவுலர் என மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார் பும்ரா. 4 ஓவர்களை வீசி வெறும் 18 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில் 13 டாட் பால்களும் அடங்கும்.


10. சாம்பியன் என நிரூபித்த மும்பை அணி

சரிவுகளை சந்திக்கும் போதெல்லாம் அதிலிருந்து பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுவது மும்பை அணியின் வழக்கம். அப்படி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என ஒட்டுமொத்த கூட்டு முயற்சியினால் மும்பை இந்த ஆட்டத்திலும் வென்று காட்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com