ஷார்ஜாவில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 46வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் விளையாடின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல். ராகுல் பவுலிங் தேர்வு செய்தார். இதனையடுத்து கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. இருபது ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்காக இன்னிங்க்ஸை கே.எல்.ராகுலும், மந்தீப் சிங்கும் ஆரம்பித்தனர்.
இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். ராகுல் 28 ரன்களை சேர்த்த நிலையில் வெளியேறினார். ஒன்பதாவது ஓவரில் கெயில் களம் இறங்கினார்.
மந்தீப் சிங் பந்தை வீணாக்காமல் ரன் சேர்த்தார். மறுபக்கம் கெயில் புயலாக மாறி பந்தை விளாசி தள்ளினார். இருவரும் இணைந்து100 ரன்களுக்கு அபாரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
18.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை எட்டியது பஞ்சாப். எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது. அதன் மூலம் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.